மன்னாரில் பதிவாகியுள்ள வாக்குகளின் நிலவரம்

Report Print Varun in தேர்தல்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு மன்னார் மாவட்ட மக்கள் மும்முரமாக தொடர்ந்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளதாக மன்னார் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சி.ஏ மோகன் ராஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி அளவில் 65.5% வாக்குகள் பதிவாகியிருந்தாக குறிப்பட்ட அவர் வாக்கெடுக்கும் பணிகள் நிறைவில் 75% வாக்குகள் பதிவாகலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் இன்று காலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும் எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Party wise Results