வரலாற்றில் இடம்பிடிக்குமா 2019 ஜனாதிபதி தேர்தல்?

Report Print Sujitha Sri in தேர்தல்

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை ஏழு மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சற்று முன்னர் (மாலை ஐந்து மணி) நிறைவடைந்திருந்தது.

இவ்வாறான நிலையில் கடந்த 1982ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு பின் இம்முறை, குறிப்பாக 81 சதவீதத்திற்கும் அதிகளவான வாக்கு வீதம் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரையான காலப்பகுதிக்குள்ளேயே வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்ற போதும் இம்முறை ஒரு மணித்தியாலம் அதிகமாக அதாவது மாலை ஐந்து மணி வரையில் வாக்களிக்க நேரம் வழங்கப்பட்டிருந்து.

அத்துடன் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே தேர்தல் வரலாற்றில் 2019 ஜனாதிபதி தேர்தல் இடம்பிடிக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.