வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வாக்களிக்க அழைத்துச் செல்லப்பட்ட வாக்காளர்கள் திரும்பிச் செல்வதற்கு போதியளவு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நேரம் வாக்காளர்கள் காத்திருப்பதற்கு நேரிட்டுள்ளதாகவும் இது குறித்து தேர்தல் ஆணைக்குழு உடன் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.