வாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு! தென்னிலங்கை பின்னடைவு

Report Print Sujitha Sri in தேர்தல்

2019ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவடைந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் சற்று நேரத்தில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க 22 தேர்தல் மாவட்டங்களிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை கடந்த முறை அதாவது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 22 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவாகிய வாக்குகளின் சதவீதத்துடன் இம்முறை பதிவாகிய வாக்குகளின் சதவீதத்தை ஒப்பிடும் வகையிலான விபரம் வெளியாகியுள்ளது.