தேர்தல் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு! சரித்திரம் படைத்த தேர்தல்

Report Print Vethu Vethu in தேர்தல்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி முடிவும் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும்.

சரியான முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொறுமையாகவே அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகள் குறைந்த தேர்தல் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தேர்தல் வெற்றி பேரணி மற்றும் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவின் பின்னர் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.