தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி மும்முரமாக நடைபெற்று வருவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.
மேலும் கூறுகையில்,
வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் அத்தருணத்திலேயே தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதேபோல முதலாவது தபால்மூல தேர்தல் முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் தேர்தல்கள் ஆணையகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.