சாய்ந்தமருதில் கூச்சலிட்ட இளைஞர்களால் பதற்றம்

Report Print Varunan in தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இன்று காலை முதல் சுமூகமாக இடம்பெற்று வந்த நிலையில், சாய்ந்தமருது பகுதியில், இரவு வேளையில் கூச்சலிட்ட சில இளைஞர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியானதன் பின்னர் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு சேகரிக்கும் பெட்டிகள் அனைத்தும் கொண்டு சென்ற பின்னர் இரவு 7 மணியளவில் சாய்ந்தமருது பகுதியில் இருந்த சில இளைஞர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers