பதவி விலகவுள்ள மஹிந்த தேசப்பிரிய! தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் தெரிவித்துள்ள விடயம்

Report Print Ajith Ajith in தேர்தல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரசியலை மதங்களில் இருந்து தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தேர்தல் தொடர்பில் சில மதத்தலைவர்கள் மீது முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் பொலிஸாரோ அல்லது படையினரே தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தியதாக முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சில அரச அதிகாரிகள் மற்றும் சில ஊடகங்கள் பக்கசார்பாக நடந்து கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2019 ஜனாதிபதி தேர்தலின் இறுதி அறிக்கையை சமர்ப்பித்த பின் தாம் பதவி விலகவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.