இரவு நேர வாக்கு எண்ணும் நடவடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

Report Print Mohan Mohan in தேர்தல்

இன்று இரவு நேர வாக்கு எண்ணும் நடவடிக்கையில் கொழும்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு அருகாமையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் தற்பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் இன்று இரவு 11:00 மணிக்கு பின்னர் வாக்கு முடிவுகள் அறிவிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது இன்றைய தினம் 60,000 க்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.