வாக்குச் சீட்டுக்களை ஏற்றிச் சென்ற வான் விபத்தில் சிக்கியது

Report Print Ajith Ajith in தேர்தல்

பதுளையில் வாக்குகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்துச்சென்ற வான் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது வான் சாரதி காயங்களுக்கு உள்ளானார்.

இந்த வான் பண்டாரவளை தமிழ் வித்தியாலயத்தில் இருந்து அம்பேதன்ன வாக்கு எண்ணும் நிலையத்துக்கு செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எனினும் காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் வாக்குப்பெட்டிகளை உரியமுறையில் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு கொண்டு சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.