நாளை புதிய ஜனாதிபதி பதவி ஏற்பாரா? தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கை மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லையாயின் நாளை மாலையில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் விதத்தில் பெறுபேறுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாளை மாலையில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் விதத்தில் பெறுபேறுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும். அவ்வாறு நாளை வெளியிட முடியாது போனால், திங்கட்கிழமையும் பெறுபேறுகளை வெளியிட வேண்டிவரும்.

எவ்வாறாயினும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை நிதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிச்சையமாக செவ்வாய்க்கிழமை புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்ய கூடியதாக இருக்கும்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியானாலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கு இரு வார காலங்கள் அவகாசம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது, இக்காலப் பகுதிக்குள் சுபவேளையில் அவரால் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள முடியும் என்றார்.

Party wise Results