சமூக ஊடகங்களில் தற்பொழுது வெளியிடப்பட்டு வரும் தேர்தல் முடிவுகள் எவையும் அதிகாரபூர்வமற்றவை என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான தேர்தல் முடிகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனினும், இவை எதுவுமே அதிகாரபூர்வமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.