சில மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகளில் கால தாமதம் ஏற்படலாம்

Report Print Kamel Kamel in தேர்தல்
165Shares

சில மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகளில் கால தாமதம் ஏற்படக் கூடும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் வாக்கு எண்ணும் பணிகளில் கால தாமதம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை உரிய நேரத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலைமையினால் இவ்வாறான கால தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஏனைய வாக்கு எண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் பொறுமையாக இருக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.