ஜனாதிபதி தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

Report Print Kamel Kamel in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் வேட்பாளரை தெரிவு செய்வதற்கு பயன்படுத்தும் முறைகள் பற்றி பலருக்கு சந்தேகம் காணப்படுகின்றது.

அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 50 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

50 வீத வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால், இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.

அதாவது, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துக் கொண்ட வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளில் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இந்த இரண்டாவது முறையிலும் இரண்டு வேட்பாளர்களும் சம அளவிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் திருவுளச்சீட்டு மூலம் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.

இரண்டு சீட்டுக்களில் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என இலக்கம் எழுதப்பட்டு, இரண்டு வேட்பாளர்களிடம் தெரிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படும்.

இதில் ஒன்றாம் இலக்கம் எழுதப்பட்ட சீட்டை பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

Party wise Results