தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் மோதிக் கொள்ளும் அரசியல்வாதிகள்

Report Print Kamel Kamel in தேர்தல்

தேர்தல் முடிவுகள் தொடர்பில் டுவிட்டரில் பதிவுகைள இட்டு சில அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது வரையில் அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகள் எதுவம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோதபாய ராஜபக்ச 60 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் எனவும் பாரிய வெற்றி நோக்கி நகர்வதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னதாகவே இது பற்றி தாம் எதிர்வு கூறியிருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் மிக மோசமான தோல்வியை சஜித் அடைவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமரர் சிறிமா திஸாநாயக்க 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விடவும் குறைந்தளவு வீத வாக்குகளையே சஜித் பெறுவார் என உதய கம்மன்பில டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பியகம தொகுதி அமைப்பாளரும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

உதய கம்மன்பிலவின் பதிவிற்கு, ருவான் விஜேவர்தன “நல்லதொரு நகைச்சுவை” என ருவான் விஜேவர்தன குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Party wise Results