யாழ்ப்பாணத்தில் வாக்குகளை அள்ளிய சஜித்!

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னிலையுள்ளார்.

தற்பொழுது வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருக்கிறார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

இதனடிப்படையில், சஜித் பிரேமதாச 312722, வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்ச 23261, வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதில் அதிகளவான வாக்குகளை சஜித் பிரேமதாச பெற்று இருக்கிறார்.

அதேபோன்று தற்போது வரை வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு அதிகளவான வாக்குகள் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.