இறுதி முடிவுகளை அறிவிக்க முடியும்! மஹிந்த தேசப்பிரிய

Report Print Ajith Ajith in தேர்தல்

அடுத்த சில மணித்தியாலங்களில் 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிக்கமுடியும் என்று தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டமைக்கு நீண்ட வாக்குச்சீட்டுக்கள் மாத்திரம் காரணம் அல்ல. இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய இடங்களில் பெய்த கடும் மழையும் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 204 தேர்தல் முடிவுகளுக்கு தாம் கையொப்பம் இட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.