ஈஸ்டர் தாக்குதல் தேர்தல் முடிவுகளை மாற்றவில்லை: முன்னாள் சபாநாயகர்

Report Print Banu in தேர்தல்
254Shares

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை மாற்றியமைக்கும் ஒரு காரணியாக அமையவில்லை என கத்தோலிக்க அரசியல்வாதிகள் கருதுவதாக, முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த ​​சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களில் மக்கள் ஆதரித்தமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்கள் பொதுஜன பெரமுனவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை மீறி சஜித்திற்கு வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் அந்த முடிவினை அவர்கள் எடுப்பதற்கு வேறு பல காரணங்கள் இருந்திருக்கலாம். என்னால் இப்போது அதற்கான காரணிகளை சுட்டிக்காட்ட முடியாது என கூறியுள்ளார்.