மக்கள் ஆணையை மதிக்கின்றோம்: அனுரகுமார திஸாநாயக்க

Report Print Kamel Kamel in தேர்தல்

மக்கள் ஆணையை மதிக்கின்றோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இம்முறை தேர்தலில் எமது கட்சி உள்ளிட்ட தரப்புக்களினால் களமிறக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்பார்க்கப்பட்டளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

பிரதான இரண்டு தரப்புக்களினால் தேர்தல் பிரசாரம் செய்யும் நிலையில் எமக்கு அவற்றுடன் போட்டியிடுவதில் சிக்கல் காணப்படுகின்றது.

அதனைப் புரிந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டோம். எனினும், ஒரு சில விடயங்களை நாம் எதிர்பார்த்தோம். எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் எமக்குக் கிடைக்கப் பெறவில்லை. எம்முடைய கணிப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படவில்லை.

இது மக்களின் விருப்புக்களின் அடிப்படையில் இடம்பெற்ற அதிகார மாற்றமாகும். அனைத்து அரசியல் தரப்புக்களும் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.