அனுரகுமார உள்ளிட்ட 33 ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப் பணத்தை இழந்தனர்

Report Print Kamel Kamel in தேர்தல்
218Shares

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 33 ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப் பணத்தை இழந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளில் 5 வீதத்திற்கு மேல் ஒரு வேட்பாளர் பெற்றுக் கொண்டால் மட்டுமே கட்டுப் பணத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

எனினும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வேட்பாளர்களும் ஐந்து வீதத்தை விடவும் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

கோத்தபாய ராஜபக்ச 52.25 வீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 41.99 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 3.16 வீத வாக்குளை மட்டுமே பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50,000 ரூபாவினையும், சுயாதீன குழுவொன்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் 75,000 ரூபாவினையும் கட்டுப் பணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறைத் தேர்தலில் 83.72 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர் என்பதுடன் இதில் 1.01 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குளாகும்.