ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்த குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

Report Print Ajith Ajith in தேர்தல்

எதிர்கால தேர்தல்களில் இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் மக்களும் பல உள்ளீடுகளை இணைக்கவேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக வந்திருந்த இந்த கண்காணிப்பாளர்கள் இன்று தமது ஆரம்ப அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், அனைத்து தலைவர்களும் சமூக ஒத்திசைவுக்கு இடமளிக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரசாரங்களின்போது அமைதியான சூழ்நிலையே இருந்தது. எனினும் சில இடங்களில் பயப்பீதியில் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

இந்தநிலையில் இலங்கையின் தேர்தல்கள் ஆணையகம் எதிர்கால தேர்தல்களில் இன்னும் சுயாதீனமாக செயற்படவேண்டும் என்று பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களின் தலைவர் பானி தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையகம் அரச ஊடகங்களுக்கு ஒழுங்குகளை விதித்தபோதும் தனியார் ஊடகங்களுக்கு அது விதிக்கப்படவில்லை.

எனவே தேர்தல் ஒன்றின்போது அரச மற்றும் தனியார் ஊடகங்கள் ஒரே ஒழுங்கின்கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் பிரசாரங்களின் போது செலவிடப்படும் நிதித்தொகை தொடர்பில் ஒழுங்குகள் அவசியம் என்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர் குழு தலைவர் பானி வலியுறுத்தியுள்ளார்.

Party wise Results