ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் 45 வன்முறைகள்!

Report Print Ajith Ajith in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 45 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுவரை இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (சிஎம்இவி) தெரிவித்துள்ளது.

இதில் 23 தாக்குதல்கள், 10 அச்சுறுத்தல்கள், சொத்துக்களை சேதப்படுத்திய 4 சம்பவங்கள் என்பன அடங்குகின்றன. அதிக சம்பவங்கள் களுத்துறை பகுதியிலேயே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் குருநாகலில் அதற்கு அடுத்தப்படியான அதிக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகரவின் தகவல்படி தேர்தலுக்கு பின்னர் 19 வன்முறைகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.