பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த இணக்கம்! மனோ கணேசன்

Report Print Murali Murali in தேர்தல்

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் 26ம் திகதியளவில் நடாத்த கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின், குறித்த தினத்தில் பாராளுமன்ற தேர்தலை நடாத்த கூடிய வாய்ப்பு காணப்படுவதாக இந்த கலந்துரையாடலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாக மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேபோல், எல்லை நிர்ணயம் நடவடிக்கைகள் இதுவரையும் முறையான நிலையில் இல்லாமையினால், மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைக்கே நடாத்த அனைவரும் உடன்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers