மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Ajith Ajith in தேர்தல்

2020ம் ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் இந்திக அநுராத இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச விரைவில் மாகாணசபைகளுக்கான திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளார்.

ஒன்பது மாகாணசபைகளுக்கும் பிரதிநிதிகள் கடந்த இரண்டு வருடகாலமாக இல்லாமல் உள்ள நிலையிலேயே மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.