பொதுத் தேர்தலுக்கான செலவு 20 பில்லியனைத் தாண்டலாம்...

Report Print Jeslin Jeslin in தேர்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான செலவு சுமார் 20 பில்லியன் ரூபாயை தாண்டக்கூடும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இத்தேர்தலில் 6 ஆயிரம் வேட்பாளர்கள் என்றும் தேர்தல்கள் செலவீனங்களை குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேர்தல் தொடர்பான செலவுகளைக் குறைக்க பல புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தமது அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் மட்டும் நான்கு பில்லியன் ரூபாயை பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers