நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட சந்திப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்

பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட சந்திப்பொன்று நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

இந்த சிறப்பு சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பொதுத்தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன் பொதுத்தேர்தலுக்கான ஆரம்ப பணிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை விரைவில் கட்சிகளின் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.