நாடாளுமன்ற தேர்தலில் கல்குடா தொகுதியில் போட்டியிடும் ரெலோ இளைஞரணி செயலாளர்

Report Print Navoj in தேர்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தனது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்களை தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் இளம் சட்டத்தரணியான கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் நவரட்ணம் கமலதாசன் கல்குடா தொகுதி வேட்பாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், டெலோ கட்சியின் செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் இந்த இளவயது வேட்பாளரை வெற்றி வேட்பாளராக மாற்ற பூரண ஆதரவினை வழங்க ஆர்வத்தோடு உள்ளனர்.

அந்த வகையில் இம்முறை இவரது வெற்றிவாய்ப்பும் அதிகமாக உள்ளது என்பது மக்களின் கருத்தாகவும் எதிர்பார்பாகவும் அமைந்துள்ளது.

சமூக அக்கறை நிறைந்த தூரநோக்கு சிந்தனை கொண்ட துடிப்புமிக்க தெளிவான சட்டம் அறிந்த இந்த வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதன் மூலம் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகி அதற்கான தீர்வுகளையும் நாம் இழந்த பல அதிகாரங்களையும் உரிமைகளையும் பெறமுடியும் என புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வளர்கள், இளைஞர்கள் இவர் மீது உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.