சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் - மஸ்தான் எம்.பி

Report Print Theesan in தேர்தல்

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சுதந்திரகட்சியும், பொதுஜன பெரமுனவும் வருகின்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என மஸ்தானிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. அதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதேவேளை வருகின்ற தேர்தலில் வன்னி மாவட்டத்திலே பொதுஜன பெரமுனவின் ஊடாக போட்டியிடவுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.