ஏப்ரல் 25 பொதுத் தேர்தல் - ஆணைக்குழு பரிந்துரை எனச் சிங்கள நாளிதழ் செய்தி

Report Print Rakesh in தேர்தல்

நாடாளுமன்றம் மார்ச் 2ம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என சிங்கள நாளிதல் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 11ம் திகதியிலிருந்து 17ம் திகதிவரை தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

அத்துடன், பொதுத்தேர்தலின் பின்னர் 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் மே மாதம் 12ம் திகதி நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என சட்டமா அதிபரும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது