பொதுத்தேர்தலுக்கான திகதி பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்

Report Print Ajith Ajith in தேர்தல்

பொதுத்தேர்தலுக்கான திகதி பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்படும் என தெரியவருகிறது.

இதனையடுத்து மார்ச் 12 - 19 திகதிகளில் வேட்புமனுக்கள் கோரப்படும்.

இந்த திகதி ஏற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி அமைக்கப்பட்ட பின்னரே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முன்னணியின் சின்னமாக 'மொட்டு' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம்களின் ரமழான் மற்றும் விசாகப்பண்டிகை என்பன அடுத்த மாதங்களில் வருவதால் ஏபரல் 25ஆம் திகதியே பொதுத்தேர்தலுக்கான உரிய திகதியாகும் என அரசாங்கத் தரப்பு தீர்மானித்துள்ளன.