ரவிராஜின் மனைவி களமிறங்குகின்றார்

Report Print Rakesh in தேர்தல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றிருந்தது.

அதன் பின்னர் 14 பேர் கொண்ட வேட்பாளர் நியமன குழுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், பெண்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியைக் களமிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.