ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஹிருணிக்கா வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in தேர்தல்

ஒழுங்குக்கு மாறாக தொலைபேசி கலந்துரையாடல்களை பதிவு செய்தமையை தவிர வேறு எந்த குற்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க செய்யவில்லை; எனவே அவருக்கு ஐக்கிய தேசிய சக்தி கட்சியின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் மீது மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. ரஞ்சனை பொறுத்தவரையில் அவருடைய கேலியான தொலைபேசி உரையாடல் யாருக்கும் பிரச்சினையை கொடுக்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு அம்சம் என்று ஹிருணிக்கா கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக காணொளியை வெளியிட்ட சம்பவத்தின் பின்னால் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் உட்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.