அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ள பாராளுமன்றம் - தேர்தல் செலவு 550கோடி ரூபாய்

Report Print Tamilini in தேர்தல்

அடுத்த ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தனக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பொது தேர்தலை நடத்துவதற்கு சுமார் 550 கோடி அளவில் செலவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிடுவார். மார்ச் 12 முதல் 19 திகதிகளுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்படும் எனவும் அண்மையில் செய்திகள் வெளியாகிய நிலையில், அடுத்த வாரம் பாரளுமன்றம் கலைக்கப்படும் என தனக்கு தகவல் வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று செய்தியாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.