தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ள விடயம்

Report Print Ajith Ajith in தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகாவிட்டால் அவர் தேர்தல் தொகுதியால் நிராகரிக்கப்பட்டவராக கருதப்படமாட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

குறித்த ஒரு வேட்பாளர் தேர்தலின் போது தோற்றாலும் அவர் பெற்ற வாக்குகள் அவருடைய கட்சி பெற்ற மொத்த வாக்குகளில் கணிசமான பங்கை வகித்திருக்கலாம்.

எனவே குறித்த தோல்வியடைந்த வேட்பாளரை தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்குவதில் தவறில்லை. தோல்வியடைந்த ஒருவர் தகுதியற்றவர் என்ற நோக்கில் பார்க்கப்படக்கூடாது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜே.வி.பி என்பன தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசிய பட்டிலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம் 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களையும், தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது.