கொழும்பில் களமிறங்கும் சரத் வீரசேகர

Report Print Sujitha Sri in தேர்தல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியல் அட்மிரல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர அண்மையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்காக பல செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த செயற்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு போட்டியிட தீர்மானித்திருந்த போதும் கொழும்பில் அதைவிட அதிகமான பிரச்சினைகள் இருப்பதால் கொழும்பில் களமிறங்க தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.