கொரோனாவால் தேர்தல் தள்ளிவைக்கப்படுகின்றதா? தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாட்டாது என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமணசிறி ரத்னாயக்க இதனை தெரிவித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதன் பின்னர் பொதுத்தேர்தல் தள்ளி வைக்கப்படும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே தேர்தல்கள் திணைக்களம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று தொடர்பில் தமது அதிகாரிகள் சுகாதார தரப்பினருடன் சந்திப்பை நடத்திவருவதாக சமணசிறி குறிப்பிட்டார்.