ரெலோவின் முதலாவது பிரச்சார கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

Report Print Theesan in தேர்தல்

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் முதலாவது பிரச்சார கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா கணேசபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் கட்சியின் மகளிர் உறுப்பினரான கனகா தலைமையில் குறித்த பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோதாரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.