பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் திகதி அறிவிப்பை ரத்துச்செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமைமீறல் மனுக்களின் விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று ஐந்தாவது நாளாக இந்த மனுக்கள் மீதான விவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது பொதுத்தேர்தல் திகதியை ரத்துச்செய்யக்கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

சட்டமா சார்பில் மன்றில் இன்று முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக டெமுனி டி சில்வா வாய்மூலமாக இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

இதேவேளை மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, நடைமுறையில் தேர்தல் ஒன்றை நடத்தமுடியும்என்று மன்றுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மன்றில் தெரிவித்தார்.

பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவின் சார்பில் அவர் முன்னிலையாகி இதனை தெரிவித்தார்.