உச்ச நீதிமன்ற வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு 70 நாட்களில் தேர்தல் ?

Report Print Kamel Kamel in தேர்தல்

பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு 70 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அனைத்து உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கூடுதலான எண்ணிக்கையில் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும், தேர்தலுக்கான செலவுகள் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.