வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்

Report Print Steephen Steephen in தேர்தல்

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக அரச அச்சக திணைக்கள அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்த போதிலும் முடிந்தளவு துரிதமாக வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக திணைக்கள அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.