எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் ஆறு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டிருக்கும்

Report Print Kamel Kamel in தேர்தல்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் ஆறு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பிரதானி தமக்கு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.