மன்னாரில் இடம் பெற்ற பொதுத்தேர்தலுக்காகான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை

Report Print Ashik in தேர்தல்
29Shares

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம் பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம், கையுறை அணிந்து எவ்வாறு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பிலும், குறைந்த அளவில் அலுவலகர்களை கொண்டு எவ்வாறு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கையில் வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், வவுனியா பிரதி தேர்தல் ஆணையாளர், முல்லைத்தீவு உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கூடுதலாக சமூக இடைவெளியை பேணி வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.