மஹிந்தாநந்தவை தோற்கடிப்பேன் - வேலுகுமார் சவால்

Report Print Ajith Ajith in தேர்தல்

முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே “வாயால் வடை சுடுபவர்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கண்டியில் போட்டியிடும் வேலுகுமார் விமர்சித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் நாவப்பிட்டி தொகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் தாமே தலைவர் என்று மஹிந்தாநந்த அலுத்கமகே கூறியுள்ளார்.

இது குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்த முறை நாவலப்பிட்டி தொகுதியில் தாமே அதிக வாக்குகளை பெறப்போவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தமுறை வாக்கு கேட்க செல்லும்போது வாக்குறுதிகளை வழங்காமல் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய தைரியத்தில் வாக்குகேட்கப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.