இம்முறை தேர்தலில் களமிறங்க இதுவே காரணம்! விநாயகமூர்த்தி முரளிதரன்

Report Print Murali Murali in தேர்தல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் 20 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்ககூடிய சாத்தியம் இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் வெற்றிபெற்று அரசுடன் இணைந்து பாரிய சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே இம்முறை தேர்தலில் களம் இறங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“இம்முறை தேவையற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் நீங்கள் உங்கள் வளங்களை இழப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் 20 ஆண்டுகளுக்கு நீடித்திருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது.

ஏனெனில் தற்போது எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தற்போது இரண்டாக பிளவுப்பட்டிருக்கின்றது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.