பலவீனமான மட்டத்தில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரம்

Report Print Steephen Steephen in தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் மிகவும் பலவீனமான மட்டத்தில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் வேலைத்திட்டம் மிக மோசமான பலவீன மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தற்போது செயற்பாட்டு ரீதியில் இருக்கும் ஒரே மக்கள் பிரதிநிதிகளின் கட்டமைப்பான உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்டோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ளனர்.

அவர்களில் இதற்கு சமமான நபர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்டத்திலான தேர்தல் பிரசாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.