பொதுத்தேர்தலில் வாக்களிக்கு நேரத்தை நீடிக்க ஆலோசனை! தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in தேர்தல்

எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடத்தப்படும்போது வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது தொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் தேர்தலின் முதல் முடிவு ஆகஸ்ட் 6ம் திகதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

இதேவேளை பொதுத்தேர்தலின் வாக்குசீட்டுக்களை எண்ணும் பணிகள் ஆகஸ்ட் 6ம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.