திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in தேர்தல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அறிமுக நிகழ்வு திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இவ் அறிமுக நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிவன் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுப்பட்ட பின்னர் "தமிழர் உரிமைகளை மீட்கவும், அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்போம்" எனும் தொனிப்பொருளில் அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.