அம்பாறையில் கருணாவின் உதவியால் அதாவுல்லா வெல்வது உறுதி! அதிர்ச்சியில் தமிழர்கள்

Report Print Gokulan Gokulan in தேர்தல்

எதிர்வரும் பொதுதேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்து அதாவுல்லாவை வெல்ல வைக்க வேண்டுமானால் கருணா அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இன்றைய தினம் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைக்க வேண்டுமானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை விழவைக்க வேண்டும்.

இன்று கருணா அணியினர் களமிறங்கி கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்து வருகின்றனர். ஆதலால் நாம் கருணா அணியினருக்கே ஆதரவளிக்க வேண்டும்.

அதனை தவிர்த்து கருணா அணியினரை திட்டி முகநூலில் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் 65 வீதமான தமிழ் மக்களே வாக்களிக்கின்றனர். தமிழர்களின் வாக்களிப்பு குறைவாக இருக்கும் போது இவ்வாறு தமிழர்களின் வாக்குகளை பிரித்துவிட்டால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இல்லாது போகக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆகவே மக்கள் சிந்தித்து வாக்களித்து நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இல்லாது செய்தால் அந்த பிரதிநிதித்துவம் அப்துர் ரஸாக் அல்லது அதாவுல்லா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.