தேர்தல் பணிகளின் போதான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் தேவையில்லை! மஹிந்த தேசப்பிரிய

Report Print Rakesh in தேர்தல்

இம்முறை பொதுத்தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப் போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று ஊடக பிரதானிகளைச் சந்தித்தபோதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,

சுதந்திரமான - நீதியான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

குழப்பங்கள் எதுவுமின்றி தேர்தல் நடைபெற சகல தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரே ஈடுபடவுள்ளதால் பாதுகாப்பு தொடர்பில் யாரும் சந்கேமடையத் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.