பிரகடனப்படுத்தப்படாமல் இருக்கும் தேர்தல் தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள்!

Report Print Ajith Ajith in தேர்தல்

தேர்தல் தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது பிரகடனப்படுத்தப்படாமை தேர்தல் ஆணைக்குழுவை பொறுத்தவரை பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்று தேசிய தோதல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பான ஒழுங்குவிதிகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். எனினும் அது இன்னும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இந்த ஒழுங்குவிதிகளுக்கு ஜனாதிபதி தமது பணிப்புரைகளை வழங்கியுள்ளார். அத்துடன் சட்டமா அதிபரும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்

எனினும் எங்கோ ஒரு இடத்தில் இது தேங்கிக்கிடக்கிறது.

இந்தநிலையில் சுகாதார ஒழுங்குவிதிகள் உரியமுறையில் சட்டமாக்கப்படாதபோது தேர்தல் பிரசாரங்களின் போது சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படும் என்று தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டும் என்று மஹிந்த தேசப்பிரிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.